சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.
சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன் சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.
மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.
மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.
தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.
பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?
சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?
ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப் பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.
நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.
- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013
-விடுதலை 30.3.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக