குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கியிருப்பாராம். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகுமாம். குருபகவான் வரும் ஜூன் 13ஆம் தேதி மாலை சரியாக 5.57 மணிக்கு கடகராசிக்கு பெயர்ச்சி ஆகிறாராம். இன்னொரு தினசரி நாளிதழ் அதே தேதியில் மாலை 6.03 மணிக்கு ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே, குருபகவான் ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே குருபகவான் ஷிப்ட் ஆகும். தேதியையும், நேரத்தையும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.
தினமலர் நாளிதழ் குரு பக வானுக்கு தனியாக குரு பயோ டேட்டா வெளியிட்டுள்ளது. இதில் குரு பகவானின் மனைவி தாரை, பிள்ளைகள் பரத்வாஜர், கசன் என்று விவரம் குறிப்பிட்டி ருந்தாலும் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய குறிப்புகள் இடம் பெறவில்லை. பகவான்கள் பயோடேட்டா அரை குறையாகத்தான் இருக்கும் போலி ருக்கிறது. குரு பகவான் பெரும் பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகள் செய்யவே விரும்புவா ராம். கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டா லும் அது நமக்கு படிப்பினையைத் தருவதற்காகத்தான் இருக்குமாம். ஏதோ குரு பகவான் அடுத்த தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு கேட்பது போல் உள்ளது. மேலும் குரு பகவான் சஞ்சரிக்கும் வீடு குருவிற்கு உச்ச வீடாம். இவர் தங்கிய மற்ற வீடுகள் நிலை என்னவென்று தெரியவில்லை.
தினசரி, வார இதழ்கள் பெரும் பாலானவை ராசி பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் வெளியிடுவதில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ராசியில் தனக்கு பலன்கள் சரியாக இல்லையே என்று வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அதே நாளில் வெளியாகும் வேறு நாளிதழில் அதே ராசிக்கு சாதகமான பலன்கள் தாராளமாக இருக்கும். ஒரு சில ராசிக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் என்று குறிப்பிட்டிருக் கும். ஆனால் இன்று இந்த ராசிக்கு வாகன விபத்து உண்டாகும் என்று மட்டும் சொல்வதில்லை. இன்று நாள்தோறும் நடக்கும் வாகன விபத்துகளில் பாதிக்கும், உயிரையும் இழக்கும் நபர்கள் எந்த ராசியிலும் சேராதவர்கள் போலிருக்கிறது.
குருப் பெயர்ச்சிக்கு ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்களைக் குறிப்பிட்டு அலுத்துப் போய் 100-க்கு இவ்வளவு மதிப்பெண்கள் என்று போட ஆரம்பித்து விட் டார்கள். ஒரு நாளிதழில் (தினமலர்) மேச ராசிக்கு 100க்கு 55 மதிப் பெண்கள் தரப்பட்டுள்ளது. அதே மேச ராசிக்கு வேறொரு நாளிதழ் (தினத்தந்தி) 65 மதிப்பெண்கள் வழங்க உள்ளது. எந்த ராசிக்கும் பெயில் மார்க் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ராசிக்கு எது சரியான மதிப்பெண் என்பதை சீனியர் சோதிடர் மறு மதிப்பீடு செய்து அறிவிக்க வேண்டுமோ என் னவோ தெரியவில்லை. இவர்கள் வெளியிடும் ராசி பலன்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமா? ஆசியா கண்டத்தில் உள்ளவர்களுக்கா? அல்லது உலக மக்கள் அனைவருக்குமா? என்றெல் லாம் கேட்க முடியாது. ஒபாமா முதல் ஒசாமா பின்லேடன் வரை அனைவருக்கும் பொருந்தும் என்றுகூட குறிப்பிடுவார்கள்.
குறிப்பிட்ட ராசியில் ஏதாவது குறையாக குறிப்பிட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களையும் பக்தர்கள் மனம் நோகாமல் சொல்லி விடுவார்கள். முன்பெல்லாம் பரிகாரம் செய்ய திரு நள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுங்கள் அல்லது புதுக் கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டிக்கும், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டிக்கும் செல்லுங் கள் என்பார்கள். ஆனால், முச் சந்தியில் இருக்கும் லோக்கல் சாமி களை பரிகாரத்திற்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள். முச்சந்தி கோயில்களுக்கு எத்தனை கும்பா பிஷேகம் நடத்தினாலும் பரிகாரம் செய்யும் சக்தி லோக்கல் சாமி களுக்கு குறைவுதான் போலிருக் கிறது. பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று பக்தர்கள் கருதி விடக் கூடாது என்பதற்காகவே இப்பொழுதெல்லாம் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஊனமுற்றவர் களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். குருபகவான் வேறு ராசிக்கு மாறுவதால் இந்த ஆண்டு மழை அதிகரிக்குமா? டெல்டா சாகு படிக்காக இந்த ஆண்டு மேட்டூர் நீர் மட்டம் உயருமா? இந்திய பாகிஸ்தான் பிரச்சினை தீருமா? இலங்கை தமிழர் பிரச்சினையில் இனியாவது முன்னேற்றம் இருக் குமா? குருவின் சாதாரணப் பார் வையில் இவையெல்லாம் சாத்திய மில்லாமல் போனாலும்கூட சோதி டர்கள் குறிப்பிடுகின்ற குருவின் வக்கிரப் பார்வையால் தீவிர வாதிகள் ஒழிந்து விடுவார்களா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். எது எக்கேடு கெட்டாலும் குருவின் பெயர்ச்சி என்று சொல்லி சோதிட வியாபாரிகளும், நாளிதழ்களும் குறி, ஜோதிட மூடநம்பிக்கையை வளர்ப் பதில் குறியாக உள்ளனர்.
- கீழ்வேளூர் வெற்றிச்செல்வன்
-விடுதலை ஞா.ம.,14.6.14
CS:GO Gambling Sites 2021 | CSGOPolygon
பதிலளிநீக்குWe reviewed all the sites like CS:GOEmpire - one 온라인카지노 of 샌즈카지노 the best CS:GO 11bet gambling sites in the world.