பக்கங்கள்

புதன், 28 மார்ச், 2018

நூல்:     அறிவோம் ஜோதிடம்!!!

நூல்:     அறிவோம் ஜோதிடம்!!!


ஆசிரியர்: வணிகவியல் வரலாற்றுமாமணி               சி.லோகநாதன்


வெளியீடு: கோல்டன் கிங், 2/11, முல்லைத்தெரு,                    ஜவஹர் நகர், திருச்சிற்றம்பலம், வானூர்,           விழுப்புரம் மாவட்டம் - 605111. 
       கைப்பேசி: +91 9659299095


மின் அஞ்சல்:     arivomjothidam@gmail.com


பக்கங்கள்: 274,     விலை: ரூ.180/-


 




 


ஜோதிடக் கலை முறைக்கும் உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகள்:


ஜோதிடக்கலை முறைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாட்டு வினாக்கள் கீழ்வருமாறு


1.    கிரகங்களின் சுழற்சி முறை வட்டப்பாதையா அல்லது நீள் வட்டப்பாதையா?

2.    ராகு, கேது கிரகங்கள் இல்லாமல் ஜோதிட அமைப்பு எப்படி?

3.    ஜோதிடக் கலையில் 27 நட்சத்திரங்களுக்கு மட்டும் உள்ள முக்கியத்துவம் எதனால்?

4.    கிரகங்களின் சுழற்சி வளையத்தில் சூரியன் மையமா? பூமி மையமா?





5.    ஜோதிடக்கலை என்பது பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்குமா? அல்லது மனித இனத்திற்கு மட்டுமா?


6.    பரிகாரங்களால் கிரகங்களின் செல்வாக்கையும், ஜோதிடக்கலை பலன்களையும் மாற்ற முடியுமா?


7.    ஜாதக ராசிக்கட்டத்தில் சூரியன் ஒவ்வொரு வீடாகச் செல்வதும், அதன் பார்வை மற்ற கிரகங்களுக்கு மாறுவதும் எப்படி?

8.    ஜாதக ராசிக் கட்டங்கள் நம் நாட்டு அமைப்பில் தமிழகத்திற்கும், மற்ற மாநிலத்திற்கும் வேறுபடுவது எதனால்?

9.    ஜோதிடக் கலையில் தசாபுத்தியின் காலக்கணக்கீட்டில், ஆண்டுக்கு 360 நாட்கள் மட்டுமா?
10.    ஒரே நேரத்தில் (லக்கனத்தில்) பிறந்த அனைவருக்கும் ஒரே பலன் இல்லாதது ஏன்?

11.    ஆண், பெண் என்பதால் ஜனன நேரங்கள் ஜோதிடக்கலை கணக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்துவது ஏன்?


12.    சூரிய உதய நேரத்தில் உள்ள வித்தியாசம் ஏன்?


13.    நாட்களின் ஆரம்பம் இரவு 12 மணியா? அல்லது சூரிய உதய நேரமா?


14.    ராகு காலம், எமகண்ட நேரங்கள் இடத்திற்கு இடம் வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஏன்?


15.    வருடப் பிறப்பு, மாதப் பிறப்பு நாட்கள் இந்தியாவின் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவது எப்படி?


16.    ஜோதிடக்கலை காலக் குறியீட்டிற்கும், நி.வி.ஜி.  மற்றும் மி.ஷி.ஜி.  காலக் குறியீட்டிற்கும் வேறுபாடு உண்டாவது ஏன்?


17.    ஜோதிடக்கலையில் ஜாதகரின் பிறந்த நேரம் (லக்கினம்) குறிப்பது குழந்தையின் தலைப்பகுதி தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் கணமா? முழு உறுப்புகள் வெளிவரும் நேரமா? அல்லது மருத்துவர் அறிவிக்கும் காலமா?


18.    அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதகப்பலன் உண்டா?


19.    நவீன ஜோதிடர்கள், குழந்தைப் பிறப்பு என்பது கருமுட்டை உண்டான நேரம் என்று கணிப்பது சரியா?


20.    ருது கால ஜாதகத்தின் அடிப்படையில் பெண்களின் திருமணப் பொருத்தம், செவ்வாய் தோஷம் கண்டு அறிவதில் உள்ள முரண்பாடு?


21.    ஜோதிடக் கலையில் ஆயுள்பலம் கணிக்க முடியுமெனில் திடீர் மரணம் எப்படி?


22.    ஜோதிடக்கலையில் குறிப்பிட்டபடி எல்லா நிகழ்வுகளும் சரியாக நடக்குமானால், ஜாதகரின் மதி, உழைப்பு மற்றும் அவன் செய்யும் குற்றச் செயலுக்கான தண்டனைச் சட்டங்கள் எதற்கு?


23.    ஜோதிடரின் கருத்துகள் உண்மைபோல் தோன்றக் காரணங்கள் எவை?


24.    ஜோதிடக்கலை சூத்திரங்கள் பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனில் இப்போது உள்ள வளர்ச்சியடைந்த மனித வாழ்க்கை முறைக்கு இது பொருந்துமா?
இவ்வாறு உள்ள 24 வினாக்களுக்குக் கீழ்க்கண்டவாறு ஜோதிடக் கலை முறைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கமாகக் காண்போம்.

-  உண்மை இதழ், 1-15.3.18