பக்கங்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2015

உலகக் கிரிக்கெட்(டு) கூத்து! இந்தியா வெல்லும் என்ற ஆரூடங்களும், யாகங்களும் பலிக்கவில்லை



  • ·        
    முட்டி தேய திருப்பதி மலை ஏறியும் பயனில்லை
    ·         நாக்கை வெட்டிக் காணிக்கை எல்லாம் வீண்!

சென்னை, மார்ச் 27- உலகக் கிரிக்கெட்டில் இந் தியா வெல்ல செய்யப்பட்ட யாகங்களும், வேண்டுதல் களும், ஆருடங்களும் பலிக்கவில்லை; மூடத் தனத்துக்கு மரண அடி கொடுக்கப்பட்டு விட்டது.
வாஸ்துமீன் சொன்னது என்னாச்சு?
சென்னை ரசிகர்கள் பிள்ளையாரப்பா எப்படியாவது மேட்ச்ல ஜெயிக்க வையப்பா... என்று கிரிக்கெட் பிள் ளையாரே கதி என்று கிடந்தனராம். அரையி றுதி வரை வந்து விட் டோம். இந்த மஞ்சள் சட்டைக்காரர்களை துவைச்சு தொங்கப் போட ணும் என்று லட்சார்ச் சனை ஒருபக்கம் நடத் தினாலும் ஜோசியம் வேறு பார்த்து வெற்றியை உறுதிப்படுத்தினராம் சென்னை ரசிகர்கள்.
கிளி ஜோசியம்... எலி ஜோசியம் அல்ல சாணக்யா  என்ற மீன் (வாஸ்துமீன்) இந்தியா நிச்சயம் வெல் லும் என்று ஜோதிடம் சொன்னது. ஆனால் அத் தனையும் பொய்யாப் போச்சே என்கின்றனர் ரசிகர்கள்.
ஜோசியம் பார்க்கலயோ!
இந்நிலையில் சென்னை, அண்ணா நகரில் அமைந் துள்ள மிசிகீளி என்னும் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தினர் வளர்த்து வரும் 'சாணக்யா' என்னும் மீன் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி எது எனக் கணித்தது. கச்சிதமாக கவ்வி மீன் தொட்டிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்தி ரேலியா ஆகிய நாடு களின் கொடி பொறித்த அட்டைகளைப் போட, சாணக்யா மெல்ல கொடி அட்டைகளை நோக்கி வந்தது. அனைவரும் ஆர் வத்துடன் சாணக்யாவைப் பார்த்தபடி இருக்க, சாணக்யா இந்தியக் கொடி பொறித்த அட் டையைக் கவ்வியது. சொன்னது பலிக்கலையே!
முன்னதாக, இலங்கை- தென் ஆப்பிரிக்கா, இந் தியா - பங்களாதேஷ், பாகிஸ்தான் - ஆஸ்திரே லியா, நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா -_ நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்ததாம் இந்த சாணக்யா. ஆனால் இம் முறை இந்தியா_ஆஸ்தி ரேலியா இடையேயான போட்டியைப் பற்றி சாணக்யா கணித்த முடிவு பொய்யாகிவிட்டதே என்று கவலையில் ஆழ்ந் துள்ளனராம் ரசிகர்கள்...
மீன் தொட்டியில் உணவு போடப்பட்டா லும், வேறு எதைப் போட்டாலும் அதை உணவு என்று எண்ணி அதை உண்ண எத்தனிக் கும் மீன். இதில் எப்படி ஜோதிடம் புகுந்தது?
ஆப்கானிஸ்தானத்திலும்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஆரூடம் கணித்து ஆச் சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பெட்டிங் கில் யாரும் ஆப்கானிஸ் தானை எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆரூடத்தை கூறியதாம்.

நியூசிலாந்தின் கான்டெர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாண வர் எடியூர்டோ சன் டோவல் உருவாக்கிய இந்த ரோபோட்டுக்கு இக்ரம் என பெயரிடப் பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள் குறித்து ஆரூ டம் கணித்த பால் என்ற ஆக்டோபஸை உருவாக் கியவர் இக்ரம் என்பதால் அவரது பெயரையே தமது புதிய ஆரூட ரோபோட் டுக்கும் சூட்டியிருக்கிறார். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என பல நாடு களின் கொடிகளைப் பார் வையிட்டு வந்த ரோபோட் திடீரென ஆப்கானிஸ் தான் கொடியை தேர்வு செய்ததாம்.
கிரிக்கெட் போட்டி யில் கத்துக் குட்டி நாடாக கருதப்படும் ஆப்கானிஸ் தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் எனில் யாருக்குத்தான் ஆச்சரியம் வராதுஆனால், முடிவு என்ன ஆனது? ஆஸ்திரே லியாதானே வென்றுள் ளது.
நாக்கை அறுத்துக் காணிக்கையாம்!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளி யான இவர், தீவிர கிரிக் கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், கமலேசன் (2) என்ற மகனும் உள்ளனர்.
இவரது மாமியார் வீடு ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமோட் டூரில் உள்ளது. நேற்று ஆஸ்திரேலியா _ இந்தியா அணிகளுக்கு இடையே யான அரையிறுதி போட் டியை சுதாகர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஜோலார் பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள வேடியப்பன் கோவிலுக்கு சென்று இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண் டுதல் செய்துவிட்டு, வருவ தாக கூறி வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் கோவிலுக்கு சென்ற சுதாகர் அங்கு பூஜை செய்து விட்டு, கற்பூரம் ஏற்றினார். பின் னர் பிளேடால் தன்னு டைய நாக்கை அறுத்து துண்டாக்கினார். வலி தாங்க முடியாத நிலையி லும், அறுத்து துண்டித்த தனது நாக்கை கோவில் முன்பு வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கடவுளிடம் வேண்டினார்.
அதைக்கண்டு அக் கம்பக்கத்தினர் பதறிய டித்து ஓடி வந்து, சுதா கரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
முட்டி தேய்ந்ததுதான் மிச்சம்!
உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளதாம். இந்தியா வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனராம்.
ஆந்திராவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு முழங்காலிட்டு ஏறிச் சென்று ஏழுமலையானை வேண்டி னாராம் அவரது பெயர் சாணக்கியா. திருப்பதி முத்தியால் ரெட்டி பள்ளியை சேர்ந்தவர்.
9ஆம் வகுப்பு படித்து வரும் இவர் ஆந்திரா கிரிக்கெட் அசோசியே ஷனில் பயிற்சி பெற்ற இளம் கிரிக் கெட் வீரர். தேசிய அளவிலான கிரிக் கெட் போட்டியில் ஆந்திர அணி சார்பில் விளையாடி வருகிறார்.
இவர் கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை பெற ஏழுமலையானை நம்பியிருக்கிறார். தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு முழங்காலிட்டு சென்றாராம். நேற்று மாலை 5.45 மணிக்கு அலிபிரியில் இருந்து புறப்பட்ட அவர் இரவு 11 மணி அளவில் திருமலையை அடைந்து  ஏழுமலையானை வேண்டி னாராம். (அதற்குள் கிரிக்கெட் போட் டியே முடிந்து விட்டது).
பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்த சிவாச்சாரியார்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட் டிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, மதுரையைச் சேர்ந்த சிவாச்சாரி யார்கள் சிலர், ஆடி வீதியில் உள்ள பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்தார்களாம்.

.