பக்கங்கள்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

சனிப்பெயர்ச்சி அறிவியல் விளக்கம்மார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு அணு வெடித்து (பெரு வெடிக் கொள்கை - Big Bang Theory) அதன் பின் 500 கோடி ஆண்டுகளுக்குப் பின் நமது சூரியக்குடும்பத்தின் மய்யக்களமான சூரியன் உருவாகியது. சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்து சூரியனின் ஆயுள் 500 கோடி ஆண்டுகள் என 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பித்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார் திரு.சந்திரசேகர்.
சூரியன் தோன்றி சுமார் 460 கோடி ஆண்டுகளுக்குப்பின் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி மற்றும் தற் போதைய நிலவரப்படி (கி.பி. 2006-க்குப் பின்) 8 கோள்களும் சூரியனிலிருந்து வெடித்துச்சிதறி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு (சுழற்சி) சூரியனைச் சுற்றி (பெயர்ச்சி) இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன? எல்லா கோள் களின் சுழற்சி, பெயர்ச்சி அட்டவணையும், அதனதன் துணைக்கோள்களின் (நிலவு கள்) பட்டியலும் தனியே உள்ளன.
சூரியனில் இருந்து வெடித்து வந்து கோள்கள் சுழன்று சுழன்று மேற்பரப்பு குளிர்ந்து கடினப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது இன்னும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. பூமியின் உள்ளே இருந்து அதன் வேகமான சுழற்சி யின்போது, அதன் உள் அடுக்கிலிருந்து இன்னும் எரிமலைக் குழம்புகள் இன்னும் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.
இப்படி குளிர்ந்து உருண்டு கொண்டே இருக்கும் உலகில் 200 கோடி ஆண்டுகளுக்குப்பின் ஒரு செல் உயிரியான அமீபா உருவாகிறது. அதன் பின் பலவகை விலங்குகள் உருவாகி, குரங்கினங்கள் உருவாகி, அதில் இருந்து 6 சதவீத மரபணுக்கள் மாற்றத்துடன் ஆதி மனிதன் தோன்றி (சார்லஸ் டார்வினின் உருமலர்ச்சி கொள்கை) நவீன நாகரிக மனிதன் உருவாகி 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. கற்கால மனிதர்கள் இரவில் உறங்குவதும், பகலில் உலவுவதுமாக வாழ்ந்து வந்தவன் இரவில் வானத்தில் எண்ணற்ற விண்மீன்களை தினமும், அளவு மாறுபாடுடன் விட்டுவிட்டு நிலவையும் பார்த்திருக்கிறார்கள். இரவில் வாழிடம் தேடி வேறு வேறு இடம் பெயர்ந்து (பெயர்ச்சி) இரவில் தங்கும் போது வானத்தைப் பார்த்தால் நிலவின் அளவு மாறுபாடுகளின் தோற்றம், மறுமுறை பார்க்கும் வரையிலான கால அளவுகள்தான் மாதங்கள் ஒரு முறை பார்த்து, மறுமுறை பார்க்கும் போது நிலவின் பின்புலத்தில் காணும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பு பூமியில் பார்த்த ஒரு பொருளோடு ஒப்பிட்டு அப்பொரு ளின் பெயரைச் சூட்டிக் கொண்டார்கள்.
இப்போது பல பத்திரிகைகளில் சிறுவர் களுக்கான பகுதியில் பலபுள்ளிகளை வைத்து புள்ளிகளை இணைத்தால் ஒரு உருவம் தெரியும் என்று வருகிறதே அதைப்போல் அன்று புள்ளியாக தெரியும் விண்மீன்கள் இணைத்து மாதங்களை உருவாக்கினார்கள்.
நிலவின் அளவு மாறுபாடுகளை மீண்டும் பார்க்கும் வரையான அளவை மாதம் எனவும், அதே ஒரு முறை நிலவின் பின்புலத்தில் காணும் விண்மீன் தொகுப்பை மீண்டும் பார்க்கும் அளவை வருடம் எனவும் கணக்கிட்டுக் கொண்டார்கள்.
இப்படி எல்லா கோள்களுக்குமே அதனதன் பெயர்ச்சி காலங்கள் சூரிய னுக்கும் கோள்களுக்குமான தூரத்தைப் பொறுத்து வேறுபடும், அதனதன் பின் புலமும் மாறுபடும்.
பூமியிலேயே ஒவ்வொரு நாட்டுக்கும், அந்தந்த நாடு அமைந்திருக்கும் தூரத்தைப் பொறுத்து நேரம் வேறுபடுகிறது அல் லவா? அதைப்போல ஒவ்வொரு கோளின் பின்புலமும் ஒன்றை ஒன்று கடந்து போகும் போது மாறுபடும். பூமி 3ஆவது இடத்தில் இருப்பதால் முதல் இரண்டு கோள்களும் உள்புறக்கோள்கள் 4ஆவ துக்கு மேல் உள்ளவை எல்லாம் வெளிப் புறக்கோள்கள்.
பின்புலம் என்றால் இராசி. இராசி என்றால் பின்புலம், பூமி சூரியனைச்சுற்றி வரும் 12 மாதங்களும் 12 பின்புலங்கள் தான் 12 இராசிகள் பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் சுற்றிக்கொள்வதால் (12 ஜ் 2 = 24) மணி நேரத்திற்கொருமுறை மாறிமாறித்தெரியும்,
பூமி நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் போது அதன் ஒரே ஒரு துணைக்கோளான நிலா நொடிக்கு 1 கி.மீ. வேகத்தில் பூமி சுழற்சியின் எதிர் வாட்டத்தில் பூமியைச் சுற்றி பெயர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
அப்போது நிலவின் பின்புலத்தில் காணும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பை எல்லாக் கோள்களுக்கும் பின்புலத்திலும் நம்மால் பொருத்திப் பார்க்கமுடியும். ஏனெனில் நமக்குப்பிறகு உள்ள வெளிப்புறக் கோள்கள் எல்லாம் நம்மைவிட (சூரியனிலிருந்து) அதிக தொலைவில் இருப்பதால் அவை சூரியனைச் சுற்றிவர அதிக காலம் எடுத் துக்கொள்கிறது. பூமி தான் வெளிப்புறக் கோள்களைவிட குறைவான தொலைவில் இருப்பதால் 365 நாளில் சூரியனைச் சுற்றி விடுகிறது. அவ்வப்போது நாம்தான் எல்லாக் கோள்களின் பின்புலத்தையும் விரை வாகப் பார்த்து, முடித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். பூமியும் நாமும் ஒன்று தான் சுழற்சியிலும், பெயர்ச்சி யிலும்.
பூமிக்கு நான்கு பருவ காலங்கள் 1) டிசம்பர் 21-22 முதல் மார்ச் 21-22 வரை 2) மார்ச் 21-22 முதல் சூன் 21-22 வரை, 3) சூன் 21-22 முதல் செப்டம்பர் 21-22 வரை 4) செப்டம்பர் 21-22 முதல் டிசம்பர் 21-22 வரை. இதில் மார்ச் 21-22 மற்றும் செப்டம்பர் 21-22 இரவு பகல் சமநாள். பூமி 23 டிகிரி சாய்வாக சுழன்று பெயர்வதால் நமக்கு வடதுருவம், தென்துருவம் என 2 துருவ காலங்கள்.
பூமி நீள்வட்டப் பாதையில் சூன் 21 முதல் தெற்கு நோக்கி 6 மாதம் பெயர்ச்சி அடைந்து சூரியனுக்கு மறுபுறம் டிசம்பர் 21 முதல் 6 மாதம் வடக்கு நோக்கி பெயர்ச்சி அடையும். அப்போது நமக்கு சூரியன் வடக்கு நோக்கி போவதைப் போலவும் பிழையே (அவாளுக்கு இதுதான் தட்சணாயன - உத்தராயண காலம்)
பூமிக்கு ஒரு பருவகாலம் என்பது 3 மாதங்கள். நமது பூமி ஒரு மாதம் பெயர்ச்சி அடையும் தூரத்திற்கு சனிக் கோள் பெயர்ச்சி அடைய ஆண்டுகள் ஆகும் 3½2½= 7½ ஆண்டு சனி என்று பூமியின் ஒருவருட காலம் (3 மாதம்) பூமியின் நான்கு பருவகாலம் என்பது 4X7½= 30 ஆண்டுகள். சனிப்பெயர்ச்சி காலங்கள். சனிக்கு அது ஒராண்டாகும்.
ஆண்டுகள் பூமி சூரியனைச் சுற்றி வரும்போது தான் சனிக்கோளின் பின்புலம் பூமியிலிருக்கும் நமக்கு மாறித்தெரிய ஆரம்பிக்கும். குறிப்பிட்ட ஒரு மாதத்தில் தொடங்கி 30 மாதங்களில் விண்மீண் தொகுப்பு காட்சி மாறித் தெரிய ஆரம்பிக்கும். அது பூமியிலிருந்து நிலவு - சனிக்கோள் - விண்மீன் தொகுப்பு என்று அமையும். நிலவு நொடிக்கு ஒரு கி.மீ. பெயர்ச்சி அடைவதால் அதன் பின் புலத்தின் ஊடாக விண்மீன் தொகுப் பினைப் பார்ப்பதால் பிற்பகல் 2.43 மணியளவில் சனிப்பெயர்ச்சி அடைகிறது (அடைகிறார்?) என குறிக்கப்படுகிறது. உண்மையில் பூமி சுழற்சி பெயர்ச்சியால் தான் இந்த காட்சி மாற்றங்கள்.
ஒருவேளை நமது சூரியக் குடும்பத் தில் முதல் கோளான புதன் என்ற அறிவன் கோளில் மனிதர்கள் இருந்தால் அக்கோள் சூரியனை 88 நாள்களில் சுற்றி வருவதால் 22 நாள்களுக்கு ஒரு முறை பூமிப்பெயர்ச்சியை கொண்டாடுவார் களோ என்னவோ? ஏனெனில் அவர்கள் தமது பூமியின் பின்புலத்தைத்தானே பின்பற்றியாக வேண்டும். ஆம் அதற்கோ அல்லது அவர்களுக்கோ நிலவே கிடையாதே.
2 ஆவது கோளான வெள்ளிக்கும் நிலவே கிடையாதே.

- செந்தமிழ் சேகுவேரா (பூமி சுழற்சி பெயர்ச்சி பேரவை)
விடுதலை,20.12.14