பக்கங்கள்

வியாழன், 14 மே, 2015

சோதிடப் புயல்!


Astronomy என்பது வான இயல். இது காரண காரியத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான பூர்வமானது. Astrology என்பது சோதிடம் கூறுதலாகும். இதற்கும் அறிவியலுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது.
ஆனால் மெத்த படித்த சிலரும் இவ்விரண் டையும் ஒன்று என்று எண்ணி குழம்புகின்றனர். Astrology சோதி டம் என்பது வெறும் புரட்டே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மெயில் நாளிதழில் (‘The mail’ Madras)  7_11_1981 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பெரும் புயல் ஒன்று தமிழ்நாட்டு கடலோரத்தையும் வங்காள தேசத்தையும் கடுமையாக தாக்கு மென்றும்; அது 1977ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய புயலைப் போல் பயங்கரமாக இருக்கும் என்றும்;
அப்புயலின் உச்ச கட்டம் 13ஆம் தேதியாக  இருக்கும் என்றும் Indian Institute of Astrology யைச் சேர்ந்த டாக்டர். ஹிராலால் பால் என்பவர் சோதிடம் கூறியிருந்ததுடன் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
ஆனால், அந்தோ பரிதாபம்! அவர் குறிப்பிட்ட நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி முடிய - அது அய்ப்பசி மாதமான போதி லும் (சென்னையில்) ஒரு துளிகூட மழை இல்லாமல் வெயில் அடித்து இரவில் பகல்போல நிலவும் காய்ந் தது.
தமிழ்நாட்டில் எங்கும் புயல் இல்லை. வங்காளதேசத்திலும் புயல் அடித்ததாகச் செய்தி இல்லை.
சோதிடம் பொய் என்பதற்கு சரியான ஆதாரமாகும் இது.
-விடுதலை ஞாயிறு மலர், 28.3.15

.