பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்
1. புதன் - 5 கோடியே 70 லட்சம் மைல்
2. வெள்ளி (சுக்கிரன்) - 2 கோடியே 60 லட்சம் மைல்
3. செவ்வாய் 4 கோடியே 85 லட்சம் மைல்
4. வியாழன் (குரு) 39 கோடியே 3 லட்சம் மைல்
5. சனி 79 கோடியே 31 லட்சம் மைல்
6. யுரேனஸ் - 169 கோடியே 40 லட்சம் மைல்
7. பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் - 9 கோடியே 30 லட்சம் மைல்
8. பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரம் - 2 லட்சத்து நாற்பதாயிரம் மைல்
எல்லா கிரகங்களும் சூரியனை மய்யமாக வைத்து நீள் வட்டப் பாதை யில் சுற்றி வருவதால் கிரகங்களின் தூரம் சற்று வேறுபடக் கூடும்.
கிரகங்கள் எல்லாம் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை பூமியை நோக்கி குறிப் பிட்ட தூரம் வரை மட்டுமே இருக்கும். ஆகையால் அந்த ஈர்ப்பு விசை பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே, பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்கள் எந்த மாற்றத்தையோ, ஏற்றத்தையோ உண்டாக்குவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.
பலன்கள் மனிதனுக்கு தானாகவே ஏற்படுவதா? அல்லது உழைப்பினால் ஏற்படுவதா? கிரகத்தின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் ஜென் மத்தில் செய்த கருமத்தின் பலனாய் ஏற்படுவதா? பகவத் கீதையில் முன் ஜென்மத்து பலனுக்கேற்ப நம்முடைய வாழ்வில் செயல்கள் எல்லாம் தலைவிதியின்படி நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த தலைவிதியை படைத்த அந்த கடவுளாலே கூட இதை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. (கீதை, அத்யாயம் -_ 4, சுலோகம் _ 13, அத்யாயம் _ 3, சுலோகம் _ சுலோகம் _ 35) எனவே பூசைகள் செய்து பலன்களை மாற்ற முடியும் என்பது அடிபட்டு அறுத்துப் போய்விடுகிறது. ஏன் இந்த முரண் பாடுகள்? ஒவ்வொரு கேட்டுக்கும், குற்றத்திற்கும் கிரகப் பலன்கள் காரணம் என்றால், மனிதர்களைக் குற்றப்படுத்த என்ன இருக்கிறது? மனிதனைத் தண்டிப்பதில்தான் அர்த் தம் உண்டா?
பூமியின் ஈர்ப்பு விசையில் 6இல் 1 பங்குதான் (1/6) துணைக்கிரகம் சந்திரனுக்கு இருக்கிறது. அதுபோலவே மற்ற கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும். துணைக் கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில மாறுதல்கள் பூமியில் உள்ள கடல் நீருக்கு சில சமயங்களில் ஏற்படலாம்.
2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகில் வந்தது. பூமியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! சனிக்கிரகம் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பூமிக்கு அருகில் வந்தது. பூமியைவிட 7.55 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம் காலத்தில் தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தன. சோதிடர்கள் செவ் வாய் தோஷமென்றும், சனி தோஷ மென்றும் நம்மிடத்தில் கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு செயல்படுவதே வாழ்வில் சிறந்த வழியாகும். தோஷம் என்பதெல்லாம் மோசம்.
ஜோதிடர்கள் சென்ற ஆண்டு 21.12.2012, உலகம் அழிந்து விடும் என்று ஊடகங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தி வந்தனர். ஆனால் ஒன்றுமே பூமிக்கு கேடு ஏற்படவில்லை என்பதை எல்லோரும் அறிவோம். மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டு, பூமி சுற்றும், உலகம் வாழும் என்பது நிறுவிக்கப்பட்டது.
கிரகங்கள் பூமியில் இருக்கும் மனி தர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், பெண் கருவுற்று அவள் வயிற்றில் புதிய உயிர் ஏற்படும் போது அந்தக் குழுந்தையின் முன் வினைப்படி எல்லா பாதிப்புகளையும் கிரகங்கள் உருவாக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பிறகு ஏன் பத்து மாதங்கள் காத்திருந்து குழந்தை தாய் வயிற்றை விட்டு பிரிந்த உடனேயே காவல்துறை ஒரு குற்றவாளியைப் பிடிக்க முற்படுவது போல் கிரகங்கள் வானத்தில் இருந்து கொண்டு அந்தக் குழந்தையைத் தாக்கி பாதிப்பைக் கொடுக்கின்றன? பல கோடி மைல் தூரத்திலுள்ள கிரகங்கள் மனிதர்களைப் பாதிக்கிறது என்ற வாதத்தை தகுந்த ஆதாரமில்லாமல் எப்படி நம்புவது?
ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பத்திற்கு ஒரு வாரிசு கிடைத்தது என்று சந்தோஷப்படுவது சிறந்ததா? அல்லது சோதிடம் பார்த்து குழந்தை யின் பிறப்பால் குடும்பத்தில் தாய் மாமனுக்குக் கெட்டது ஏற்படும். தாய் தந்தையருக்கு நோயைக் கொடுக்கும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் என்று குழப்பமடைந்து பொருளற்ற பரிகார பூசை செய்து துன்பப்படுவது சிறந்ததா? இவை இரண்டில் எது சிறந்தது என்று அறிவின்பால் சிந்தித்து முடிவெடுப்பது உங்களிடமே விடப்பட்டுள்ளது.
பெண்ணின் ஜன்ம நட்சத்திர பலன், ருதுப்பலன், திருமணப் பொருத்தம், ஜோதிட பலன் கிரகங்களின் பாதிப்பு ஆகியவைகளைப் பற்றி சிறந்த சோதி டர்கள், அறிவியலாளர்கள், ஊடகத் தார்கள் முதலானோர் எடுத்துரைத்த கருத்துக்களை இங்கு பார்த்தோம். சோதிடர் கூறும் கோட்பாடுகளை வேறு மதத்தவர்கள் நம்புவதில்லை. அவர்கள் என்ன சீர்கெட்டா போய் விட்டனர்? இனி இந்து மதம் பெண் களின் பிறப்பைப் பற்றி என்ன கூறு கிறது என்பதைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.
பிரம்மசூத்திரம், சிறீபாஷ்யம்
இந்து மதத்தின் பெருந்தலைவர் களில் ஒருவரான இராமானுஜர் விசிஷ்ட்டாத் வைதம்) பிரம்ம சூத்திரத் திற்கு தான் எழுதிய உரையின் சிறீபாஷ் யம்) முகப்பிலேயே பின்வருமாறு கூறியுள்ளார்.
பகவத் பலன தானக் ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்மசூத்ரா வ்விருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்டிபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே
அதாவது
விஸ்தீரணாம் ப்ரம்மசூத்ரா வ்விருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்டிபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே
அதாவது
பூர்வாச்சாரியார்கள், அதாவது பிரம்ம சூத்திரத்தைப் பண்ணிய ஆச் சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் (இராமானுஜர்) இங்கு தருகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும் என்று முன்னோர்கள் மொழிந்ததை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார் இராமானுஜர்.
பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய சிறீபாஷ்யத்தின் (உரையின்) அபசூத்ராபிஹாரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்:
பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர் களுக்குத்தான் மோட்சம். நான் சொல் வது பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமணர் அல்லாத சூத்ரர்கள் மோட்சம் வேண்டுமென்றால் இந்தப் பிறவியை இப்படியே கழித்து அடுத்த ஜென்மாவில் பிராமணனாகப் பிறக்க பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். ஒரு வேளை, அடுத்த பிறவியில் பிராமணனாகப் பிறக்க அவர்களுக்குப் பிராப்தம் கிடைக்குமானால், வேத, உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.
அதுபோலவே, பிராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள்தான். எனவே, அவர்கள் அடுத்த ஜென்மாவில் பிராமண புரு ஷனாக அதாவது பிராமண ஆணாக அவதரித்தால்தான் மோட்சத்திற்குப் பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும் என்கிறார் இராமானுஜர்.
மோட்சமென்றால் அடுத்த ஜென் மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண் டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுப விப்பது (அக்னி ஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார் - _ இந்து மதம் எங்கே போகிறது என்ற நூல் _ நான்காம் பதிப்பு பக்கம்: 126-_127).
மூடத்தனத்தை முறியடிப்போம்
பெண்கள் மீதான வன்புணர்ச்சிக்குக் காரணம் கிரகப் பலன் என்று கூறுவது எவ்வளவு மூடத்தனம். மதம், ஜாதி, வேதங்கள், சாத்திரங்கள் ஆகிய அனைத்துமே பெண்களை அடக்கி, ஒடுக்கி வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதையே இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள் ளது. பெண் விடுதலைக்கு பாடுபடும் அமைப்புகள், அனைத்துமே தங்களின் மனச்சாட்சியை விழிப்படையச் செய்து இந்தக் கொடுமையை வெகு விரைவில் சமூகத்திலிருந்து துடைத்தெறிய முன்வர வேண்டும்.
வெறும் பெண் உரிமை பேசுவதும் இடஒதுக்கீடு அளிப்பதும் இந்தக் காலகட்ட சூழ்நிலைக்குப் போதாது. பெண் இழிவினை முதலில் போக்க ஆவன செய்ய வேண்டும். காலம் வெல்லும் என்று காத்திருக்கக் கூடாது.
மனிதனால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் என்னும் மூடநம்பிக்கை சமுதாயத்தை எவ்வளவு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பது ஆதாரத்துடன் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் திறந்த மனதுடன் (With Open mind) செய்திகளை ஊன்றிப் படித்து உண்மைகளை உணர வேண்டும். இந்த உலகில் நம் நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இல்லாத, இந்த மூடத்தனம் நமக்கு தேவைதானா?
ஜோதிடம் பொய்; உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று கர்நாடக விச்சாரவாதி சங்கம், பெங்களூரு - _ சவால் விட்டு பல ஆண்டுகள் ஆகியும், சால்வை தைரியமாக சந்திக்க எந்த ஜோதிடரும் இன்று வரை முன் வரவில்லை, ஏன்? ஜோதிடர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றே கருத வேண்டி இருக்கிறது.
- பேரா. ஏ.எஸ். நடராஜ்
-விடுதலை ஞா.ம.20.7.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக