மிகப்பழங்காலத்தில் வானவியல் பற்றிய சரியான உண்மைகள் தெரியாத போது உருவானதுதான் ஜோதிடம். அது அந்தக்காலத்து அறிவு. அவ்வளவுதான் அதற்கு மரியாதை. ஆனால், அதையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் எப்படி? மாற்றம் என்பதுதான் மாறாதது. இதற்கு நேர் எதிர்மறையா னதுதான் மதங்கள். ஆனால், கிறித்துவ மதத்தில் சில மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. போப் ஜான் பால் மிமி கலிலியோவுக்கு கிறித்துவ மதம் இழைத்த கொடுமைக்கு வெளிப்படை யாக மன்னிப்பு கேட்டதும், இப் போதிருக்கிற போப் அதற்கு ஒரு படி மேலே சென்று உருமலர்ச்சி கொள் கையை ஏற்றுக்கொண்டதும், மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை எண்பித்துள்ளது. ஆனால், ஹிந்து மதம்; சனாதன மதம்; வேதமதம் என்கிற பார்ப்பன மதம் மட்டும் மாறாமல் அதே காட்டுமிராண்டி காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அதில் ஒரு கூறுதான் இந்த ஜோதிடம்.
இந்த தனி உரிமை, தனி உடைமை சமுதாய அமைப்பில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க இயலாதவை. வாழ்வு நிலையில் பல்வேறு சிக்கல்களில் குடும்பம் சிக்குண்டு இருப்பதும் இயல்புதான். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பலகீன மனம் உடையோர்தாம் இந்த ஜாதக மோசடி செய்வோரின் மூலதனம். இல்லாத கோள்களை இருக்கிறது என்றும், இருக்கும் கோள்களை இல்லை என்றும் ஜோதிடத்தில் கூறுகிறார்கள்.
முக்கிய மாக பூமியே இவர்கள் ஜோதிடத்தில் இல்லை. சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறது நமக்கு. சிரிப்புகூட வந்துவிடுகிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டுதான் மக்களின் வாழ்க்கையோடு விளையாடு கிறார்கள். ஜாதகக் கணிப்பில் ஒரு விநாடி தவறினால்கூட கணிப்புத் தவறும் என்கிறார்கள். சில நட்சத்திரங்களில் இருந்து நமக்கு ஒளி வந்து சேருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். வீனஸ் என்ற கோளின் உண்மை நிலைக்கும், நமக்குத் தெரியும் நிலைக்கும் இடையில் ஆறு நிமிட நேர வேறுபாடு இருக்கிறது. அதாவது வீனஸ் என்று நாம் பார்ப்பது ஆறு நிமிடத்திற்கு முந்தைய தோற்றம். அதே இடத்தில் இப்போது தெரிவது வேறொரு நட்சத்திரம். இப்படி இருக்க இவர்கள் அந்த நட்சத்திரங்களை வைத்து பூமியில் உள்ள மனிதர்களுக்கு இராசி பலன் பார்க்கிறார்கள்? தந்தை பெரியார் பிறந்த காலம் என்பதைப்பற்றி அன்று கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்றுமே எவருமே பதில் சொன்னதில்லை. அதுமட்டுமல்ல, இந்த இராசி பலனில் சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு இடமே கிடையாது. இது ஒன்றே போதும் ஜோதிடம் என்பது ஆரிய பண்பாட்டின் ஊடுருவல் என்பதற்கு சான்று.
கர்நாடகா அரசு இந்த மோசடிகளை வெளிப்படையாகவே கண்டித் திருக்கின்றது. ஆனாலும் ஜோதிடத்தை பள்ளிகளிலும், கல்லூரி களில் பாடமாக்கத் துடிக்கும் மத்திய அரசுதன் இப்போது நமக்கு வாய்த் திருக்கிறது? முன்னாள் குடியரசுத் தலை வரும் சிறந்த அறிவியல் அறிஞருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத் தில் ஜோதிட மடமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். டாக்டர் கோவூர், டாக்டர். பராஞ்சிபே, மா. சிங்காரவேலர் உள்பட ஏராளமான அறிஞர்கள் இதைச் சாடியுள்ளனர். ஜாதக பலனால் திருமணமே ஆகாமல் தவித்த தன் நண்பரின் மகளுக்காக புதிதாக ஒரு ஜாதகத்தை - அந்த பெண்ணுக்கு பொருத்தமான ஒரு ஜாதகத்தை எழுத வைத்து, இப்போது அந்தப் பெண் நன்றாக வாழ்ந்து கொணடிருக்கிறாள். இது எங்கும் நடக்கிறது. புகழ் பெற்ற எழுத்தாளர் குஷ்வந்தசிங் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் போது, இராசி பலன் எழுதக்கூடிய நபர் வரவில்லையே என்பதால் இவர், அந்த பக்கத்தை நிரப்ப வேண்டுமே என்ப தற்காக ஏற்கனவே எழுதி அதே பத்தி ரிக்கையில் வெளியான ஏதோவொரு இராசி பலனை எடுத்துப் போட்டிருக் கிறார். அது பெரிய வரவேற்பை பெற்றி ருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் மக்கள்தானே வேறு எப்படி இருக்கும்?
இந்த மோசடிக்கு நாமும் துணைபோவதா என்று, குஷ்வந்த் சிங் இராசி பலன் பகுதியையே அந்தப் பத்திரிகையில் இருந்தே அகற்றியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ஒரு நாயின் பிறந்த நாளைக் கொண்டு போய் ஜோதிடக்காரரிடம் காட்டி பலன் கேட்ட போது, அதற்கு அந்த ஜோதிடர் மனிதர்களுக்கு பார்ப்பது போல பார்த்து பலன் சொன்னதை ஏறக்குறைய எல்லோருமே படித்தும் கேட்டும் இருப்போம். அதுமட்டுமல்ல, ஈரோட்டில் ஒரு பெண் தனக்கு ஜோதிடம் பார்த்த பார்ப்பனர் ஒருவர் ஏமாற்றுப் பேர்வழி என்றதும், துடைப்பக் கட்டையைக் கொண்டு அடித்து விரட்டியதை எல்லா நாளேடு களும்தான் வெளியிட்டன. இதற்குப் பிறகும் இந்த மோசடிகள் தொடரத்தான் செய்கின்றன. அந்த மோசடிகளைத்தான் பகுத்தறிவு நாளேடாம் விடுதலை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்! என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஏற்றத் தாழ்வற்ற சமத்துவம் ஏற்படுகின்ற வரையிலும் இந்த மோசடிகளை இப்போதைக்கு வீழ்த்த முடியாது என்றாலும், பணம் கொடுத்துப் பார்த்த ஜோதிடம் பலிக்க வில்லை என்றால் சம்பந்தபட்ட ஜோதி டரைத் தட்டிக் கேட்கும் மனோபாவ மாவது மக்கள் மனதில் வரவேண்டும். அப்படி வந்தாலே இந்த ஜோதிடம் ஒழிந்துவிடும்.
விடுதலை ஞாயிறு மலர்,6.12.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக